Centre for War Victims & Human Rights

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home Events Events இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்

இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல்

E-mail Print PDF

இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடல் ஒன்று கடந்த மார்ச் 21 அன்று
போரால் பாத்க்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்ளுக்குமான நடுவதினால்
நடாத்தப்பட்டது. இந்நடுவத்தின் தலைவர் அன்ரன் அவர்கள் தொடக்கவுரை
நிகழ்தினார். இம்மையத்தை பற்றி அறிமுகப்படிதிய அவர், இது கடந்த ஓன்பது
மாதங்களாக செயல் பட்டுக்கொண்டிருபதாகவும், இதன் முக்கிய பணி இலங்கையில்
நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு
ஆளானவர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுதுவது எனக் கூறினார்.  மேலும் கனடா தவிர ஜரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில்
செயல் படுவதாக்கூறினார்.  பாதிக்கப்பட்ட மக்கள் தகவல்களை இந்த நடுவத்தில்
பதிவதன் மூலம் எதிர்காலதில் இதுபோன்ற உரிமைமீறல்கள் நடைபெறாமல்
தவிர்க்கமுடியும் எனத் தெரிவித்தார்.

இனவாதம் என்பது இலங்கையில் மட்டும் அல்ல உலகத்தில் பல இடங்களில்
நடைபெறுவதாகக்கூறியவர், 1960, மார்ச் 21ல் தென் அமெரிக்காவில் நடைபெற்ற
இன அழிப்பை நினைவுகூறும் விதமாக ஜக்கிய நாடுகள்சபை இந்நாளை உலக இனவாத
நாளாக அனுசரிப்பதாகவும், இதுபோன்ற நிழ்வுகளில் எம் சமுகத்தினர் அக்கறை
கொள்வதில்லை என வருத்தம் தெரிவித்தார். கனடாவிலும் இனப்பாகுபாடு
இருப்பதாக கூறியவர் அதற்கு ஏதிராக இன்றளவும் போராட்டங்கள் நடைபெறுவதாக
கூறினார்.

இதனை அடுத்து பேசிக் பத்திரிக்கையின் ஆசிரியரும், மனித உரிமை
செயற்பாட்டாளருமான ஸ்டிவ் டி ஸ்ல்வா வேலை இடங்களில் இனப்பாகுபாடு என்ற
தலைப்பில் தனது உரையை நிகழ்தினார். உலக அளவில் நடைபெற்ற இனவாத செயல்களை மேற்கோள் காட்டியவர், கனடாவில் பூர்வீக குடிகளுக்கும்,
குடிவரவாளர்களுக்கும் இடையே நடந்த இனவாத செயல்களையும் அதன்மூலம்
பூர்வக்குடிகள் பாதிக்கப்பட்ட்தையும் நினைவுகூர்ந்தார். கனடா என்பது
பிட்டிஸ், பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக் மக்களால் உருவாக்கப்பட்ட தேசம்
என்றும், இதில் ஆங்கிலேயர்களே ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருந்தார்கள்
என்று குறிப்பிட்டவர், 19ம் நுற்றாண்டில், தொழிற்புரட்சி காரணமாக நடந்த
வன்முறைகளையும், சில இனப்படுகொலைகளும் நடந்ததாக கூறியவர் அது இன்றும்
தொடர்வதாக கூறினார். தொழிற்புரட்சியின்போது ஜரோப்பிய நாடுகளில் இருந்து
தொழிளாலர்கள் வருவிக்கப்பட்டு அவர்களுக்கு பூர்வக்குடிகளின் நிலம்
வழங்கப்பட்ட்தையும், சீனா, இந்தியா போன்ற மற்ற நாட்டில் இருந்து
குடியேறியவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படாததையும், அவர்கள் பற்றிய தொலை
நோக்குப்பார்வை அன்றைய கனடிய அரசிற்கு இல்லை என்பதையும்,
நினைவுகூர்ந்தார். 1914ல் இந்தியவின் சீக்கிய சமூகத்தை சேர்ந்த 300ம்
கப்பல் மூலம் கனடாவிற்கு வந்ததையும், அவர்கள் கனடாவிற்குள்
அனுமதிக்கப்படாததையும் நினைவுபடுதியவர் இதற்கு காரணம், இனவாதமே என்றும்,
அன்றய காலகட்டத்தில் வெள்ளையர்கள் தங்கள் இன மக்கள் மேல் மட்டுமே
கவனத்தைசெலுத்தினார்கள் என்றும் குறிபிட்டார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் கனடாவின் தொழிளாலர் தேவைகளுக்காக உலகின்
பல பகுதிகளில் இருந்தும் வெள்ளை இனத்தவர் வருவிக்கப்பட்டார்கள் எனவும்,
1950களில் கரேபியா போன்ற நாடுகளில் இருந்து வீட்டுவேலைக்காக பெண்கள்
அழைத்து வரப்பட்டதாக் கூறியவர், 1967களில் வெள்ளை இனத்தவரின் வரவு
குறையவே கனடாவின் குடிவரவாளர் சட்டம் புள்ளி(point system) அடிபடையிலும்,
1970 பல் இன கலாச்சாரத்தின்(multiculturalism)  அடிபடையிலும் மாற்றி
அமைக்கப்பட்டது என்றவர், க்யூபாக்(quebec)கின் தனி நாட்டுக்கோரிக்கையை
நீர்த்துப்போகச் செய்யவும் பல்இன கலாச்சாரத்தை கனேடிய அரசு
செயல்படுத்திற்று என்றார். மேலும் அவர்,பொருளாதாரத் தேவைகளும், பலம்
பொருந்திய மக்கள் தொடர்பு சாதனங்களும், பல்இனக்கலாச்சரமும் இனவாதம்
தொடர்பான பார்வையை மாற்றி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது என்றார்.
இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுவேலைக்காக பிலிப்பினொ
பெண்களும்(caregivers), கூலிவேலைக்காக அழைத்துவரப்படும் மெக்சிகோ
நாட்டுத்தொழிலார்களும்(seasonal workers) மிகக் குறைந்த ஊதியத்துடன் வேலை
செய்வதும், அவர்களுக்கு கனடிய குடியுரிமை மறுக்கப்படுவதும் தொடர்கின்றது
என்றவர், வேலை இடங்களில் இனவாதம் தொடர்பான விடயங்களில் மற்ற
சமுகத்தினருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இத்தகைய சவால்களை
எதிகொள்ளமுடியும் என்றார் இறுதியாக.

அடுத்துப் பேசிய முன்னாள் அகதிகள் குடிவரவு துறை நீதியரசர் ஸ்றி குகன்,
மற்றய சிறுபாண்மையினரின் தேவைகளுக்கு அவர்களுடன் நாமும் போராடுவதன்
மூலம், நமது உரிமைகளையும் மீட்டுக்கொள்ள முடியும் என்றார். மேலும் அவர்
பேசுகையில், கனேடிய குடிவரவுதுறை தற்காலிக விசாக்களை அதிக அளவு ஓவ்வொரு
வருடமும் அதிகரிப்பதன் மூலம் மீண்டும் கடந்த கால இனவாத கொள்கையை
கடைபிடிக்க முயல்கின்றது எனவும், குடியுரிமை தொடர்பான விண்ணப்பங்களில்
அரவாணிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எனவும் கூறினார்.

அடுத்துப்பேசிய சிறி கனடாவையும், மனிதனேயத்தையும் நேசிக்க வேண்டும்
என்றவர், தோல்விகளை கண்டு துவளாமல், கடுமையான உழைப்பின் மூலம் இனவாதத்தை வெல்லமுடியும்  என்றார் ஆணித்தரமாக.

கலந்துரையாடலின் மற்றுமொரு மெளனப்பேச்சளர் ஜிவாவின் ஓவியங்கள். மனிதநேயம்
பற்றிய அவரது கருப்பு வெள்ளை ஒவியங்கள், பார்பவரது  மனதில் ஒர் அதிர்வலையை ஏற்படுத்திற்று என்றால் மிகையில்லை.

 

War Victim Documentation

Information Collection

Click on the country to get details.

Australia
Belgium
Canada
Denmark
France
Germany
Italy
Netherlands
New Zealand
Norway
Sweden
Switzerland

If you live in a country that is not listed above, please contact us by email at dm@cwvhr.org or call us at 1-416-628-1408.

Volunteer wtih us

CWVHR is looking for volunteers who could help with data entry, research, writing and web content management. If you would like to help, please contact us at 416-628-1408 or email us at dm@cwvhr.org

Who's Online

We have 28 guests online