போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்

அகேகே

நாம்  யார்? 
போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஒரு சுதந்திர, இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற, மனித உரிமைகள் அமைப்பாகும்.  போ.பா.ம.உ.ந போரால் பாதிக்கப்பட்ரோரைப் பற்றியவர்களின் தகவல்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆவணப்படுத்துவதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது.  இந்த அமைப்பு உள்ளூரிலும், அனைத்துலக அளவிலும் மனித உரிமை விழுமியங்களையும் கல்வியையும் மேம்படுத்தவும் பாடுபடுகிறது.  
 
எப்படி மனித உரிமைகள் நடுவம் தனது பணிகளை மேற்கொள்கின்றது?
ஆவணப்படுத்தல், ஆய்வு, கல்வி, பேணுதல் ஆகியவை எமது முதன்மைப் பணிகளாக இருக்கின்றன.  பாதிக்கப்பட்டோர் தொடர்பாக தகவல்களை துல்லியமாக, புறவயமாக, ஆதாரபூர்வமாக  ஆவணப்படுத்துகிறோம்.  இந்த தகவல்களை எமது ஆய்வுக் குழுவால் ஊடக, சாசன, இதர உசாத்துணைகள் கொண்டு மெய்தறிதல் செய்யப்படுகின்றன.  நாம் மனித உரிமைகள் தொடர்பான நூல்களையும் ஆவணங்களையும் கொண்ட ஒரு நூலகத்தையும் அமைத்து வருகிறோம்.  இதழ், அறிக்கைகள் ஆகியவற்றையும் வெளியிட உள்ளோம்.  இச் செயற்பாடுகள் ஊடாக நாம் மனித உரிமைகள் தொடர்பான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விளைகிறோம்.  சில தெரிந்த சட்ட நடவடிக்கைகளுக்கும் நாம் உதவுவோம்.
 
இதுவரை இந்த நடுவம் செய்துள்ள பணிகள் என்ன?
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, காயப்பட்டு, பசிகிடந்து, இறக்கிறார்கள்.  ரொறன்ரோவில் இருந்த பலரின் உறவுகள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்.  இவர்களின் துயரத்தைப் பகிர ஒரு நினைவாலயத்தை ஒரு தொண்டர் குழு அமைத்தது.  இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை முறைப்படி, பன்னாட்டு நியமங்களின் படி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று உணர்ந்தனர்.  பல உலக மனித உரிமை அமைப்புகளின் நெறிகளுக்கு ஏற்பவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரைவிலக்கணத்துக்கு அமையவும், பன்னாட்டு நியமங்கங்களுக்கு ஏற்ற முறையிலும்ம் குறிடோக்சு (Human Rights Documentation Information System) என்று அறியப்படும் மனித உரிமைகள் தகவல் ஆவணப்படுத்தல் முறைமைக்கு ஏற்ற வகையிலும் இத் தரவுகள பதிவு செய்யப்படுகின்றன.  தற்போது 10 நாடுகளில் எமது ஆவணப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.  ரொறன்ரோவில் நாம் எமது நடுவ அலுவலகத்தை நிறுவி உள்ளோம்.  
 
போ.பா.ம.உ.ந வேறு அமைப்புகளுடன் சேர்ந்தியங்குகின்றதா?
எமது கொள்கைகளையும் நோக்கங்களையும் பகிரும் அமைப்புகளுடம் நாம் சேர்ந்தியங்குவோம்.  தற்போது மதிப்புப் பெற்ற சில பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்தியங்கி வருகிறோம்.  
 
தரவுகள் எந்தளவு பாதுகாப்பாக உள்ளன, அவற்றுக்கு யார் பொறுப்பு?
உயர்ந்த நுட்பங்களைப் பயன்படுத்தி கணிணிச்செயலியை மிகப் பாதுக்காப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.  செயலி பல கட்ட அனுமதிகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது.  எமது உறுப்பினர்கள் கனடிய தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு ஏற்ப செயற்படு பயிற்சி பெற்றவர்கள்.  இந்த தரவுகளுக்கான முழுப் பொறுப்பையும் நடுவம் ஏற்றுக் கொள்கிறது.  
 
அமைப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன?
போ.பா.ம.உ.ந ஒரு வேரடி மனித உரிமைகள் அமைப்பு.  அனேக முக்கிய முடிவுகள் இணக்க முடிவாக எடுக்கப்படுகின்றன.  நடுவம் ஆவணப்படுத்தல், ஆய்வு, பரப்புரை, நுட்பம், நிர்வாக ஆகிய அணிகளைக் கொண்டது.  தேர்தெடுக்கப்பட்ட இயக்குநர்களால் தலைமைத்துவம் வழங்கப்படுகிறது.  
 
யார் நிதியுதவி செய்கிறார்கள்?
எமது பெரும்பகுதி நிதி உறுப்பினர்களின் கட்டணங்களும், தனிநபர் நன்கொடைகளும் ஆகும்.  எமது வேலைகள் அனைத்தும் தன்னார்வத் தொண்டர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
நாம் எப்படி உதவலாம்?
முதலாவதாக தயவுசெய்து பாதிக்கப்பட்ட உங்கள் உறவினர்கள் பற்றிய தகவல்களை பதியுங்கள்.  எமது ஆவணப்படுத்தல் மற்றும் மனித உரிமைகள் பேணல் செயல்பாடுகளுக்கு நிறைய மனித நிதி வளங்கள் தேவை.  நீங்கள் எம்முடம் வந்து பணியாற்றலாம்.  அல்லது நன்கொடை தந்து உதவலாம்.  எம்மிடம் வரையறை செய்யப்பட்ட பணித்திட்டங்கள் பல உண்டு.  கல்லூரி, பல்கலைக்கழக மாணவர் எம்மோடு வந்து பணியாற்றுவதன் மூலம் ஆய்வு, நுட்பம், சமூக ஒழுங்கமைப்பு போன்ற பல துறைகளின் அனுபவம் பெறலாம். 
 
எப்படி பாதிக்கப்பட்டவரைப் பற்றி பதியலாம்? 
எமது அலுவலகம் 705 புரோகிரசு சாலை, அலகு 106, இசுகார்பரோவில் அமைந்துள்ளது.  நீங்கள் 416-628-1408 தொலைபேசி இலக்கத்தில் முன்பதிவு செய்து வந்தால் நன்று.  மேலகதிக தகவல்களுக்கு எமது வலைத்தளத்தைப் (www.cwvhr.org) பாக்க.
 
பாதிக்கப்பட்டோருக்கு நேரடி உதவிகளை நடுவம் வழங்குமா?
பாதிக்கப்பட்டோருக்கு நேரடி உதவிகளை வழங்கும் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய தகவல்களை நாம் பகிர்வோம்.  தற்சமயம் எம்மிடம் நேரடி உதவிகள் வழங்ககூடிய வளங்கள் இல்லை.
 

தேடுக

நீங்கள் தேடியது இல்லை எனில், எம்மைத் தொடபு கொள்ளவும், அல்லது ஓர் இடுககயின் கருத்துப் பெட்டியில் குறிப்புப் போடவும்.

காப்பகம்